புரோ கபடி போட்டிகள்: தமிழ் தலைவாஸ் அணிக்கு முதல் வெற்றி!

Last Modified திங்கள், 22 ஜூலை 2019 (08:30 IST)
ஒவ்வொரு ஆண்டும் புரோ கபடி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்தது. அந்த வகையில் சமீபத்தில் தொடங்கிய 2019ஆம் ஆண்டின் புரோ கபடி போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணியும் குஜராத் அணியும் வெற்றி பெற்றது

முதலில் நடந்த போட்டியில் குஜராத் அணியும் பெங்களூரு அணியும் மோதியது. இந்த போட்டியில் குஜராத் அணி 42 புள்ளிகளும், பெங்களூரு அணி 24 புள்ளிகளும் எடுத்ததால் குஜராத் அணி அபாரமாக வெற்றி பெற்றது
இதனை அடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும், தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் 39 புள்ளிகளும் தெலுங்கு டைட்டன்ஸ் 26 புள்ளிகளும் எடுத்ததால் தமிழ் தலைவாஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது

இந்த வெற்றிக்கு பிறகு குஜராத் அணி 5 புள்ளிகளுடன் முதலிடத்திலும் தமிழ் தலைவாஸ் அணியும் 5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :