புரோ கபடி போட்டிகள்: பெங்கால், டெல்லி அணிகள் வெற்றி

Last Modified புதன், 24 ஜூலை 2019 (21:59 IST)
புரோ கபடி போட்டிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் தபாங் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் உத்தரப்பிரதேச அணியும் பெங்கால் அணியும் மோதின. ஆரம்பத்திலிருந்தே பெங்கால் அணி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் அந்த அணி மிக எளிதில் உத்தரபிரதேச அணியை வீழ்த்தியது


பெங்கால் அணி 48 புள்ளிகளும், உத்தரபிரதேச அணி 17 புள்ளிகளும் எடுத்ததால் 31 புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்கால் அணி மிக அபாரமாக வெற்றி பெற்றது

இதேபோல் இன்று நடைபெற்ற அடுத்த போட்டியில் டெல்லி மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் சிறப்பாக விளையாடினர். இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் விட்டுக்கொடுக்காமல் விளையாடியதால் இறுதிவரை யார் வெற்றி பெறுவார்கள் என்று யூகிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது
இறுதியில் டெல்லி அணி 34 புள்ளிகளையும் தெலுங்கு டைட்டானிக் 33 புள்ளிகளையும் எடுத்ததால் ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் டெல்லி அணி திரில் வெற்றி பெற்றது


இந்த நிலையில் நாளை டெல்லி அணியும் தமிழ் தலைவாஸ் அணியும் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :