புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (23:09 IST)

தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி: ரசிகர்கள் அதிருப்தி

புரோ கபடி போட்டி தொடர் நேற்று முன் தினம் முதல் நடந்து வரும் நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி, முதல் போட்டியில் வெற்றி பெற்றாலும் நேற்றைய இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இன்று தெலுங்கு டைட்டான்ஸ் அணியுடன் தமிழ் தலைவாஸ் அணி மோதியது.

ஆரம்பத்தில் தமிழ் தலைவாஸ் அணி அதிக புள்ளிகளை பெற்று முன்னிலை பெற்று வந்தாலும் நேரம் ஆக ஆக தெலுங்கு டைட்டான்ஸ் அணி புள்ளிகளை அடுத்தடுத்து பெற்றது. இறுதியில் தெலுங்கு டைட்டான்ஸ் அணி 33-28 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்று இரண்டாவது தோல்வி கிடைத்தது. இதனையடுத்து ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தாலும் பி பிரிவில் தமிழ் தலைவாஸ் அணி 7 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதேபோல் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதிய இன்னொரு போட்டியில் இரு அணிகளும் தலா 32 புள்ளிகள் எடுத்ததால் டிரா ஆனது. எனவே இரு அணிகளுக்கும் தலா 3 புள்ளிகள் வழங்கப்பட்டது.