புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (12:45 IST)

தோல்வியிலிருந்து மீளுமா தமிழ்தலைவாஸ்? தெலுங்கு டைட்டன்ஸுடன் இன்று மோதல்

புரோ கபடி லீக்கின் இன்றைய ஆட்டத்தில் தமிழ்தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ்  அணியுடன் இன்று மோத இருக்கிறது,
அஜய் தாகூர் தலைமையிலான தமிழ்தலைவாஸ் அணி முதல் லீக் ஆடத்தில் பாட்னா பைரேட்ஸுடன் மோதியது. சிறப்பாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 42-26 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னாவை வீழ்த்தியது. 
 
இதனைத்தொடர்ந்து நேற்றைய இரண்டாவது லீக் ஆட்டத்தில் தமிழ்தலைவாஸ் அணி  உ.பி. யோதா அணியுடன் மோதியது. இதில் 32-37 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ்தலைவாஸ் போராடி தோல்வியுற்றது.
 
இந்நிலையில் இன்று நடைபெற உள்ள மூன்றாவது லீக் ஆட்டத்தில் சென்னை தலைவாஸ் விஷால் பரத்வாஜ் தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் மோத இருக்கிறது.
 
இன்று இரவு 9 மணிக்கு தொடங்கவிருக்கும் இந்த ஆட்டத்தில் சென்னை தலைவாஸ் நேற்றைய தோல்விலிலிருந்து மீண்டு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.