புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 8 அக்டோபர் 2018 (07:38 IST)

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணிக்கு முதல் வெற்றி

இந்த ஆண்டுக்கான புரோ கபடி தொடர் போட்டிகள் நேற்று சென்னையில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி பாட்னாவுடன் மோதியது. இந்த போட்டியை கமல்ஹாசன் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தேசிய கீதம் பாடி போட்டியை தொடாங்கி வைத்தார். தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பர தூதர் விஜய்சேதுபதி போட்டியை நேரில் கண்டு ரசிக்க வருகை தந்தார்

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே தமிழ் தலைவாஸ் அணியினர் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். முதல் 18 நிமிடங்களில் தமிழ் தலைவாஸ் அணி 16-6 என்ற புள்ளிக்கணக்கில் முன்னணியில் இருந்தது. இந்த ஆதிக்கம் கடைசி வரை இருந்ததால் தமிழ் தலைவாஸ் அணி 42-26 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னாவை வீழ்த்தியது. அதேபோல் நேற்று நடைபெற்ற புனே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா 3 புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி உபி அணியுடனும், புனே ஹரியானா அணியுடனும் மோதவுள்ளது.