1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 29 ஜூன் 2023 (07:57 IST)

மகளிர் தேசிய கால்பந்தாட்ட போட்டி: 5 ஆண்டுக்கு பின் தமிழ்நாடு அணி சாம்பியன்...

மகளிர் தேசிய கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் ஹரியானா அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 
 
தமிழ்நாடு அணி கடந்த 2008 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில் ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் சாம்பியன் பட்டம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அது மட்டும் இன்றி மகளிர் தேசிய கால்பந்தாட்ட போட்டிகள் தமிழ்நாடு அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நேற்று பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழ்நாடு அணிக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் 
 
Edited by Siva