1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 ஜூன் 2023 (19:01 IST)

தமிழ்நாடு போலீஸை பாராட்டிய அமைச்சர் உதயநிதி

‘மக்கள் கூடுகிற 6 ஆயிரத்துக்கும் அதிகமான சந்திப்புகளில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி உலக சாதனை படைத்துள்ள நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு வாழ்த்துகள்'' என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 ஆம் தேதி உலக போதைப் பொருள் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழக அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில்,

‘’சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் தேசிய நாட்டு நலப்பணித்திட்ட மாணவ - மாணவியர், மக்கள் கூடுகிற 6 ஆயிரத்துக்கும் அதிகமான சந்திப்புகளில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.

இதனைப் பாராட்டி World Records Union அமைப்பு, உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கியுள்ளது. இந்த சிறப்புக்குரிய நிகழ்ச்சிகளை ஓர் இயக்கமாக முன்னெடுத்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு வாழ்த்துகள். ஒருங்கிணைத்த தமிழ் நாடு போலீஸ்-க்கு பாராட்டுகள்’’ என்று தெரிவித்துள்ளார்.