1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. NO change in WTC final venue for next three season

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
டி 20 போட்டிகளின் வரவால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான வரவேற்புக் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கியுள்ளது. இதனால் டெஸ்ட் போட்டிகளை ரசிகர்களிடம் கொண்டு செல்வதற்காக இரண்டு ஆண்டுகள் சுழற்சி கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை நடந்துள்ள மூன்று சீசன்களில் நியுசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இரண்டு முறை இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டத்தை இன்னும் வெல்லவில்லை.

இந்த தொடரின் இறுதிப் போட்டி கிரிக்கெட்டின் மெக்கா என்று வர்ணிக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதை சாம்பியன் பட்டம் வெல்லும் அணியின் மைதானத்துக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் அடுத்த மூன்று சீசன்களுக்கு இறுதிபோட்டி லார்ட்ஸில் தான் நடக்கும் என ஐசிசி அறிவித்துள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!