தொடர்புடைய செய்திகள்
- ரூ.20,000ல் சாம்சங் வெளியிடும் புதிய மொபைல் போன்.. அசத்தலான அம்சங்கள் என்னென்ன?
- முதல் நாளே எதிர்க்கட்சிகள் அமளி.. மக்களவை ஒத்திவைப்பு.. டிரம்ப் கருத்துக்கு விளக்கம் கோரி ஆர்ப்பாட்டம்..!
- பாகிஸ்தான் அதிபர் ஆகிறாரா அசீம் முனீர்? பிரதமருக்கு தெரியாமல் செல்லும் சுற்றுப்பயணம்..!
- வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ்..!
- ஜிம்மில் ஏற்பட்ட காயம்… மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகும் இந்திய வீரர்!
தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!
கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலை அடுத்து இந்திய முப்படை பாகிஸ்தானின் 9 இடங்களில் குறிவைத்துத் தாக்கியது. தீவிரவாதிகள் முகாமைதான் தாக்கினோம் என்று இந்தியா சார்பில் சொல்லப்பட்டாலும், மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டை வைத்தது.
இதையடுத்து இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் நடந்த அடுத்தடுத்த தாக்குதல்களால் பதற்றமான சூழல் உருவானது. அதன் பின்னர் போர் நிறுத்தத்தை ஏற்று இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தின.
இந்நிலையில் தற்போது நடந்து வரும் உலக சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இந்த தாக்குதலைக் கண்டிக்கும் விதமாக இந்திய சாம்பியன்ஸ் அணி பாகிஸ்தான் அணியோடு விளையாட மறுத்தது. இது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி “விளையாட்டு என்பதே தேசங்களை இணைக்கதான். அதிலும் அரசியலை நுழைத்தால் எப்படி முன்னேற்றம் அடைய முடியும்? உரையாடல் இல்லாவிட்டால் எப்படி தீர்வு கிடைக்கும்? ஒரே ஒரு அழுகிய முட்டை எல்லாவற்றையும் வீணாக்கிவிடும்” எனக் கூறியுள்ளார்.