வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 28 ஜூன் 2023 (07:40 IST)

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வருமான வரி சோதனை: 20 மணி நேரம் நடந்ததாக தகவல்..!

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் கடந்த 20 மணி நேரம் ஆக நடந்த வருமானவரி சோதனை நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தூத்துக்குடி தலைமை இடமாக கொண்டு தமிழகத்தின் மட்டுமின்றி  இந்தியாவின் பல மாநிலங்களில் கிளைகளை கொண்டிருக்கும் வங்கி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி.
 
இந்த வங்கி கிராமப்புறத்தில் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் நேற்று திடீரென வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
 
சுமார் 20 மணி நேரமாக நடைபெற்ற வருமானவரி சோதனையின் முடிவில் அதிகாரிகள் சில ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva