1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 13 அக்டோபர் 2017 (22:03 IST)

கடைசி டி20 போட்டி ரத்து: ட்ராவில் முடிந்த தொடர்!!

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. 


 
 
இந்தியா வந்த ஆஸ்திரேலியா அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் தோல்வியுற்றது. இதனால் டி20 போட்டி தொடரில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது.
 
நடைபெற்ற முதல் இரண்டு போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சம நிலை வகித்தது.
 
இந்நிலையில் ஐதராபாத்தில் மூன்றாவது டி20 போட்டி நடக்க இருந்தது. ஆனால், நேற்று அங்கு பலத்த மழை பெய்ததால் மைதனாத்தில் ஈரப்பதம் அதிக அளவில் காணப்பட்டது.
 
இதனால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.  நீண்ட நேரமாகியும் மைதானத்தை தயார் செய்ய முடியாத காரணத்தினால், அம்பயர்கள் போட்டியை ரத்து செய்வதாக அறிவித்தனர்.
 
இதனால் இரு அணிகளுக்கும் சமமான புள்ளிகள் வழங்கப்பட்டு டி20 தொடர் ட்ராவில் முடிக்கப்பட்டது.