புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 13 அக்டோபர் 2017 (22:03 IST)

இந்தியாவில் கிரிக்கெட் நடத்த தடை: பாகிஸ்தான் மும்முரம்!!

இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதை தடை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் ரசிகர்கள் குறல் கொடுத்து வருகின்றனர்.


 
 
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டி கவுஹாத்தியில் நடந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
 
இதனால் ஆத்திரமடைந்த இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பஸ் மீது கற்களை வீசினர். இந்த தாக்குதளின் போது ஆச்திரேலிய வீரர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
 
இந்நிலையில் இந்தியா ஒரு தீவிரவாத நாடு அதனால் அங்கு கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதை ஐசிசி உடனடியாக தடை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
இந்த தவறான செயலுக்கு இந்திய அணி ரசிகர்கள் மன்னிப்பு கோரிய நிலையிலும் பாகிச்தான் அணி ரசிகர்கள் இவ்வாறு கூறுவதற்கு இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதை தவிர்த்து வருவதே காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.