செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2017 (11:50 IST)

பார்க்கிங், ஆன்லைன் கட்டணம் ரத்து - விஷால் அதிரடி அறிவிப்பு

அரசு நிர்ணயம் செய்த கட்டணைத்தையே தியேட்டர்களில் வசூலிக்க வேண்டும் என்பது உட்பல பல அதிரடி அறிவிப்புகளை நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் அறிவித்துள்ளார்.


 

 
ஜி.எஸ்.டி, கேளிக்கை வரி என 40 சதவீதத்துக்கு மேல் அரசுக்கு வரி செலுத்த வேண்டியிருப்பதால், தமிழக அரசு விதித்த கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழக சினிமா உலகினர் கோரிக்கை வைத்துள்ளனர். சமீபத்தில் சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டது. அரசுக்கும், சினிமா துறையினருக்கும் இடையே இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டு வருகிறது. 
 
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
 
அரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் தியேட்டர்களில் வசூலிக்கப்பட வேண்டும்.
 
கேண்டின்களில் எம்.ஆர்.பி. விலைக்கே பொருட்களை விற்பனை செய்யப்பட வேண்டும்.
 
தியேட்டர்களில் அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்பட வேண்டும்.
 
தண்ணீர் கொண்டு வர பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்.
 
திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது
 
விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும்.
 
என விஷால் அறிவித்துள்ளார். ஆனால், பொதுமக்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ள இந்த அறிவிப்புகளுக்கு, திரையரங்க உரிமையாளர்கள் சம்மதம் தெரிவிப்பார்களா என்பது போகப் போகத்தான் தெரியவரும்.