திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (18:06 IST)

தோனியுடன் கடும் வாக்குவாதம்: இனி சிஎஸ்கே அணியில் இருப்பாரா சுரேஷ் ரெய்னா?

ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீபத்தில் துபாய் சென்று இருந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக திடீரென இந்தியா திரும்பிய சுரேஷ் ரெய்னா, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட மாட்டார் என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தனது வீட்டில் நடந்த அசாதரணமான சம்பவம் மட்டும் அணியிலிருந்து விலக காரணம் இல்லை என்றும் வேறு ஒரு முக்கிய காரணம் இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
சமீபத்தில் துபாய் செல்வதற்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சென்னையில் ஒரு வாரம் தங்கி பயிற்சி மேற்கொண்டனர். இந்த பயிற்சி தேவை இல்லாத ஒன்று என்றும் இதனால் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சுரேஷ் ரெய்னா சுட்டிக்காட்டி இருந்தார்
 
ஆனால் தோனி சென்னையில் பயிற்சி என்பதில் பிடிவாதமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஒரு பந்து வீச்சாளர் உட்பட 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் தான் முன்பே கூறியபடி விளைவுகள் நடந்துவிட்டதாக தோனியிடம் கூறி வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது
 
இந்த வாக்கு வாதம் காரணமாகவே அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. தோனி ஓய்வு அறிவித்த அதே நாளில் சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு அறிவித்து தங்கள் நட்பை நிரூபித்த நிலையில் தற்போது ஒரு சில நாட்களில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இனிமேல் சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணிக்காக விளையாடுவாரா? என்பது சந்தேகம் தான் என்றும் அவரது வட்டாரங்கள் கூறுகின்றன