டி 20 போட்டிகளில் 500 விக்கெட்கள் – சாதித்த ஜாம்பியன் வீரர்!
உலகம் முழுவதும் இப்போது டி 20 போட்டிகளுக்கே ரசிகர்கள் மற்றும் வீரர்களிடம் ஏகோபித்த ஆதரவு கிடைத்து வருகிறது.
டி 20 உலகக்கோப்பை 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பின்னர் அதற்கான ஆதரவு உலகெங்கும் அதிகமாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் நாட்டில் தனித்தனியாக டி 20 தொடரை நடத்தி வருகின்றன. அதில் அனைத்து போட்டிகளுக்கும் மகாராஜாவாக பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் இப்போது கரிபீயன் லீக் போட்டிகள் நடந்து வருகின்றன. ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் பிராவோ நேற்று தனது 500வது டி20 விக்கெட்டை வீழ்த்தி இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கும் முதல் பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார். 459 போட்டிகளில் 501 விக்கெட்டுகளை எடுத்து பிராவோ இந்த சாதனை படைத்துள்ளார்.