புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : சனி, 14 செப்டம்பர் 2019 (21:23 IST)

கிரிக்கெட் உலகில் அட்டகாசமான ’சூப்பர் கேட்ச்’...வைரலாகும் வீடியோ

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நம்மூரில் நடப்பது சகஜம்தான் என்றாலும், உள்ளூர் போட்டிகளிலும் கூட உலகத்தரமாக வீரர்கள் விளையாடிவருகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
இந்நிலையில் மஹாராஷ்டிர  அணி வீரர் ருதுராஜ் என்ற வீரர் எதிரணி பேட்ஸ் மேன் அடித்த பந்தை சிக்ஸர் எல்லைப் பகுதியில் பிடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
 
நேற்று நடந்த இந்தப் போட்டியில், ரயில்வே அணி - மஹாராஸ்டிர அணிகள்  மோதினர். இதில் ரயில்வே அணி 178 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது. எனவே கடைசியில் 22 ரன்கள் வேண்டுமென்ற நிலையில், பேட்ஸ்மேன்களுக்கு களத்தில் நெருக்கடி ஏற்பட்டது.

எனவே, ரயில்வே அணி பேட்ஸ்மேன் அடித்த பந்து சிக்ஸர்தான் என எல்லொரும் நினைத்துக்கொண்டிருக்க, மஹாராஸ்டிர அணிவீரர் ருதுராஜ், அதை அட்டகாசமாக ஒரே கையில் பிடித்து மற்றொரு வீரருக்கு தூக்கி வீசிவிட்டு, எல்லைக் கோட்டைத் தொட்டதால், ரயில்வே அணி பேட்மேன் அவுட்டானார். இந்த சூப்பர் கேட்ச் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.