வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Updated : வியாழன், 12 செப்டம்பர் 2019 (22:10 IST)

ஆசஷ் 5வது டெஸ்ட்: 7 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து தத்தளிப்பு

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆசஷ் தொடர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 5வது போட்டி இன்று ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது 
 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் அபார பந்து வீச்சு காரணமாக இங்கிலாந்து பேட்ஸ்மேன் விக்கெட்டுகள் சரியான இடைவெளியில் விழுந்து வருவதால் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க  திணறி வருகின்றனர்.
 
 
இங்கிலாந்து கேப்டன் ரூட் 67 ரன்களும் பர்ன்ஸ் 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்  பெய்ர்ஸ்டோ 22 ரன்களும், ஸ்டோக்ஸ் 20 ரன்களும், டென்லே 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்ததால் சற்று முன் வரை இங்கிலாந்து அணி 70 ஓவர்களில்  7 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்துள்ளது. 
 
 
ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் மார்ஷ் 4 விக்கெட்டுக்களையும், ஹாஜில்வுட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இரு அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றுள்ள நிலையில் இங்கிலாந்து இந்த போட்டியை வென்று தொடரை சமன் படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்