திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 14 செப்டம்பர் 2019 (10:05 IST)

சர்ஃபிராஸே கேப்டனாக தொடர்வார்..எந்த மாற்றமும் இல்லை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சர்ஃபராஸ் அகமதுவே இனியும் தொடர்வார் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலாளர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி லீக் ஆட்டத்தில் வெளியேறியது. இதனையடுத்து அணியின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்ட போது, சர்ஃபராஸ் அகமதுவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு சதாப் கானை கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிகளுக்கு பாபர் அசாமை கேப்டனாகவும் நியமிப்பதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மாற்றப்பட்டார்.

இந்நிலையில் இலங்கை அணி , பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அதன் கேப்டனாக சர்ஃபராஸே தொடர்வார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் துணை கேப்டனாக பாபர் ஆசம் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.