வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 8 ஜூன் 2023 (15:16 IST)

ஸ்டீவ் ஸ்மித்தும் சதமடித்தார். அஸ்வின் இல்லாமல் திணறும் இந்திய அணி..!

Steve smith and Travis head
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. 
 
நேற்றைய முதல் நாளின் போது ஆஸ்திரேலியா அணியின் மூன்று விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்திருந்தது. ஹெட் 146 ரன்கள், சுமித் 95 ரன்கள் எடுத்திருந்தனர். 
 
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாள் போட்டி தொடங்கிய நிலையில் ஸ்மித்தும் தற்போது சதம் அடித்து உள்ளார். அதேபோல் ஹெட் 150 ரன்களை நெருங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
முதல் மூன்று விக்கெட்டுகள் சீக்கிரம் விழுந்தாலும் அதனை அடுத்து விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறி வருகின்றனர். அஸ்வின் இருந்திருந்தால் கண்டிப்பாக விக்கெட்டை வீழ்த்தி இருப்பார் என்று கூறப்பட்டு வருகிறது
 
Edited by Siva