சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஸ்ரீசாந்த் ஓய்வு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்ரீசாந்த் அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஸ்ரீசாந்த் முதல் தர கிரிக்கெட் உள்பட அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார்
மேலும் தனக்கு ஆதரவளித்த ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிர்வாகிகளுக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்
ஸ்ரீசாந்த் திடீரென ஓய்வு முடிவை அறிவித்துள்ளது அடுத்து அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்