திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 மார்ச் 2022 (10:12 IST)

உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த இலக்கு!

உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கடைசி நேரத்தில் களமிறங்கிய பூஜா அதிரடியாக விளையாடி 67 ரன்களும், ரானா 53 ரன்களும் எடுத்தனர்
 
முன்னதாக தொடக்க ஆட்டக்காரர் மந்தனா 52 ரன்களும் தீப்திசர்மா 40 ரன்களும் அடித்துள்ளனர் 
 
இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் பாகிஸ்தான் அணி 245 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது