செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 7 மார்ச் 2022 (11:09 IST)

ஜடேஜா சதமடிக்க என்ன காரணம்: கவுதம் கம்பீர் கணிப்பு!

ஜடேஜா சதமடிக்க இதுதான் காரணம் என தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். 

 
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்றோடு முடிவடைந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 
 
இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் ஆல்ரவுண்டர் ஜடேஜா. பேட்டிங்கில்  7 ஆவது வீரராகக் களமிறங்கிய அதிரடியாக விளையாடி 175 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.
 
பேட்டிங்கில் கலக்கியது போலவே பவுலிங்கிலும் 9 விக்கெட்கள் வீழ்த்தி கலக்கினார். முதல்  இன்னிங்சில் இலங்கை அணியின் 5 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் ஜடேஜா வீழ்த்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 
 
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறுகையில், இந்தியாவுக்கு வெளியே ஜடேஜா சிறப்பாக விளையாடிதன் விளைவாகவே மொகாலி டெஸ்ட்டில் ரன்கள் குவிக்கக் காரணமாக அமைந்தது. இந்த 175 ரன்கள் எடுக்க நிறைய முயற்சிகள் செய்திருக்கிறார் ஜடேஜா. 
 
அதனால் தான் 7வது வீரராக இறங்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சூழ்நிலையில் ஜடேஜா ரன்களை எடுக்காமல் இருந்திருந்தால், வேறு யாரையாவது அணி நிர்வாகம் நியமித்திருக்க முடியும். ஏன், அஸ்வின் 7வது இடத்தில் இருக்கலாம். இதுபோன்ற கடினமான சூழ்நிலையில் ரன்களை எடுத்த பிறகு, உங்கள் புள்ளி விவரங்களை மேம்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும் என்று கம்பீர் கூறினார்.