இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: முத்தரப்பு டி20யில் கவனிக்க வேண்டிய சில...

Last Modified செவ்வாய், 6 மார்ச் 2018 (16:57 IST)
இலங்கை, இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகள் விளையாடும் டி20 போட்டி இலங்கையில் இன்று துவங்குகிறது. ஆனால், இலங்கையில் 10 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 
 
இலங்கையில் மதவாத மோதல் தொடர்பாக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனால், டி20 கிரிக்கெட் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், பிசிசிஐ திட்டமிட்டபடி போட்டி நடக்கும் என உறுதிபடுத்தியுள்ளது. 
 
இலங்கையின் 70 வது சுதந்திர தின கொண்டாட்டம் காரணமாக இந்த போட்டி நடத்தப்பட இருக்கிறது. இதற்கு நிதாஸ் கோப்பை போட்டி என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.
 
மேலும், இந்திய அணியில் கோலி, தோனி போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது. பும்ரா, புவனேஷ்வர்குமாருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 
 
இலங்கை அணி ஏற்கனவே ஆட்டத்தில் மோசமான நிலையில் உள்ளது. இதில் அணியில் இருந்து ஏஞ்சலோ மேத்தியூஸ், தினேஷ் டிக்வெல்லா அணியில் இருந்து விலகியுள்ளனர். 
 
வங்கதேச அணி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இலங்கைக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் சிறப்பாகவே விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :