புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2019 (20:51 IST)

மழையால் போட்டி ரத்து: மோசமான சாதனையில் இருந்து தப்பித்த இலங்கை!

இன்று நடைபெறவிருந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
 
இன்று பிரிஸ்டான் நகரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே லீக் போட்டி ஒன்று நடைபெறவிருந்தது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி ஒரு தோல்வி பெற்றிருந்ததால் இந்த போட்டியை வெல்ல தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தன
 
இந்த நிலையில் பிரிஸ்டான் மைதானத்தில் இன்று காலை முதல் நல்ல மழை பெய்து வந்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பின்னரும் மைதானம் போட்டிக்கு ஏற்ற வகையில் இல்லாததால் மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள் போட்டி ரத்து என அறிவித்தனர். இதனையடுத்து இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. எனவே இரு அணிகளும் தற்போது புள்ளிப்பட்டியலில் மூன்று புள்ளிகளை பெற்றுள்ளது
 
இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் ஒரு முறை கூட வெல்லவில்லை என்பது வரலாறு. அதேபோல் உலக்ககோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இதுவரை ஒருமுறை கூட பாகிஸ்தானை வெல்லவில்லை. இன்று பாகிஸ்தான் அணியுடன் போட்டி நடந்திருந்து இலங்கை அணி தோல்வி அடைந்திருந்தால் அந்த மோசமான சாதனை தொடர்ந்திருக்கும். மழையால் இலங்கை அணி தப்பித்துவிட்டதாகவே கருதப்படுகிறது.
 
இந்த நிலையில் நாளை இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணியும் இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணியும் மோதவுள்ளன,.