புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 7 ஜூன் 2019 (20:10 IST)

பாகிஸ்தான் - இலங்கை போட்டி இன்னும் தொடங்கவே இல்லை! ஏன் தெரியுமா?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த நிலையில் இன்னும் ஒரு பந்துவீச கூட வீசவில்லை. போட்டி நடைபெறவுள்ள பிரிஸ்டால் மைதானத்தில் மழை பெய்து வருவதால் இன்றைய போட்டி இன்னும் தொடங்கவில்லை. 
 
உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணிக்கே இந்த போட்டி ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் தற்போது பிரிஸ்டால் நகரில் மதியம் 3 மணிக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது மழை நின்றுவிட்டாலும் பிட்ச் நிலைமை போட்டிக்கு ஏதுவாக இருக்குமா? இனிமேல் போட்டி தொடங்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஒருவேளை போட்டி தொடங்குவதாக இருந்தாலும் 20 ஓவர்கள் போட்டியாக மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
 
இந்த நிலையில் சற்றுமுன் இரண்டு நடுவர்களும் மைதானத்தை ஆய்வு செய்து வருகின்றனர். போட்டி நடத்தும் வகையில் மைதானம் இருப்பதாக அவர்கள் கருதினால் இந்த போட்டி ஓவர்கள் குறைக்கப்பட்டு நடைபெறும், இல்லையேல் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது