1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 1 ஆகஸ்ட் 2018 (15:40 IST)

உலக பேட்மிண்டன் போட்டி - இந்திய வீரர் ஸ்ரீகாந்த் போராடி வெற்றி

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது.
கடந்த ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெற உள்ள உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் நான்ஜிங் நகரில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
 
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2வது சுற்றில் இந்திய வீரர் கிதம்பி ஸ்ரீகாந்த், ஸ்பெயின் நாட்டின் பேப்லோ அபியனை எதிர்கொண்டார்.
 
ஆட்டத் தொடக்கத்திலே முன்னிலையில் இருந்த ஸ்ரீகாந்த் முதல் செட்டை கைப்பற்றி(21-15), பின் இரண்டாம் செட்டை(12-21) அபியனிடம் பறி கொடுத்து விட்டார்.  அதன்பின்னர் போராடி 3வது செட்டை(21-14) கைப்பற்றினார்.
 
இந்த வெற்றியின் மூலம் அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.