காரைக்குடி காளைக்கு மீண்டும் ஒரு வெற்றி: திண்டுக்கல் அணியை வீழ்த்தியது

Last Modified செவ்வாய், 31 ஜூலை 2018 (07:57 IST)
தற்போது நடைபெற்று வரும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று நெல்லை மைதானத்தில் நடந்த ஒரு போட்டியில் திண்டுக்கல் மற்றும் காரைக்குடி அணிகள் மோதின,
முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 177 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அனிருத் 53 ரன்களும், விவேக் 42 ரன்களும், கேப்டன் ஜெகதீசன் 25 ரன்களும் எடுத்தனர். காரைக்குடி அணியின் முகுந்தன் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்த நிலையில் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய காரைக்குடி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுப்புடன் விளையாடினர். ஆதித்யா 49 ரன்களும், கேப்டன் அனிருதா 43 ரன்களும் ராஜ்குமார் 41 ரன்களும் எடுத்தனர். இறுதியில் திண்டுக்கல் அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் காரைக்குடி அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

காரைக்குடி பந்துவீச்சாளர் முகுந்தன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :