வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 30 ஜூலை 2018 (13:37 IST)

உலக பேட்மிண்டன் போட்டி - சீனாவில் இன்று தொடக்கம்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் இன்று கோலாகலமாக தொடங்க உள்ளது.
ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெற உள்ள உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் நான்ஜிங் நகரில் இன்று கோலாகலமாக தொடங்க உள்ளது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
 
இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பி.வி.சிந்து, வெண்கலம் வென்ற சாய்னா நெவால், ஆடவர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மேலும் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் இந்த ஆட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.