அப்பாடா....சேப்பாக் சூப்பர் கில்லி அணிக்கு முதல் வெற்றி

Last Updated: புதன், 1 ஆகஸ்ட் 2018 (06:16 IST)
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி, தற்போது நடந்து வரும் தொடரில் விளையாடிய ஐந்து போட்டிகளிலும் தோல்வி அடைந்த நிலையில் முதல்முறையாக காஞ்சி அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
நேற்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில் சேப்பாக் அணி, காஞ்சி அணியுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 180 ரன்கள் குவித்தது. கார்த்திக் மிக அபாரமாக விளையாடி 76 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து 181 ரன்கள் இலக்கு என்ற நிலையில் களமிறங்கிய காஞ்சி அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சேப்பாக் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கார்த்திக் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.

இந்த போட்டியை வென்ற போதிலும் சேப்பாக் அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :