திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 16 நவம்பர் 2022 (16:42 IST)

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஹர்த்திக் பாண்டியா கேப்டனாக நியமனம்!

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டி-20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில்  படுதோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

இதையடுத்து, நியூசிலாந்து தொடரில் இந்தியா  பங்கேற்கவுள்ளது. இதற்காக ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியை பிசிசியை அறிவித்துள்ளது.

இந்தியாவில் நடக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடர் வரும் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி தொடங்கவுள்ளது.இத்தொடரில் மூத்த வீரர்களான கோலி, ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில்.,டி-20 தொடருக்கு ஹர்த்திக் பாண்டியா கேப்டனாக செயல்படவுள்ளார்.

ஒரு நாள் தொடருக்கு தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இத்தொடரில் இந்திய அணிக்கு விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்திற்கு எதிரான தொடரில்  இந்திய அணியில்,இடம்பெற்றுள்ள வீரர்கள், ஹர்த்திக் பாண்டியா, ரிஷப் பந்த், ஷூப்மன் கில், இஷான் கிஷன், தீப ஹூடா, ஷரெயாஷ் அய்யர், சூர்யாகுமார் யாதவ்,  வாஷிங்டன் ஷாபாஸ், அமது யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், குல்தீப் சென், தீபக் சாஹர்  ஆவர்.

ஒரு நாள் தொடரில் ஷிகர் தவான் கேப்டனாகவும், ரிஷப் பந்த் துணை கேப்டனாகவும்  நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj