வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 1 ஜனவரி 2023 (00:25 IST)

செளதிஅரேபியா கிளப்பில் இணைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

Christiano ronaldo
உலகின் மிகச் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ரியல் மாட்ரிட் அணியின் இருந்து விலகிய அவர், கடந்தாண்டு மான்செஸ்டர் கிளப்பில் இணைந்து விளையாடினார்.

பின்னர், மான்செஸ்டர் யுனைட்டட் அணியின் மானேஜருக்கும் அவருக்கும் இடையே மோதல்  நிலவியதால் அவர், அந்த அணியில் இருந்து விலகினார்.

சில நாட்களுக்கு முன் நடந்த 22 வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தன் தாய் நாடான  போர்ச்சுக்கள் அணியில் விளையாடிய போதிலும், நாக் அவுட் சுற்றுடன் வெளியேறியது.

இந்த நிலையில், தற்போது, சவுதி அரேபியாவின் அல் நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டுவரை அவர் விளையாடுகிறார். கிறிஸ்டியானோ ரொனால்டோவை ரூ. 600 கோடிக்கும் அதிகமான சம்பளம் கிடைக்கும் எனவும், விளம்பர ஒப்பந்தங்கள் உள்ளிட்டவற்றைச் சேர்ந்தால் அவருக்கு ரூ.1,770கோடி வருவாய் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.