தொடர் தோல்விகள்; மூன்று மாதத்தில் 7 கேப்டன்கள் மாற்றம்: என்ன ஆனது இலங்கைக்கு??


Sugapriya Prakash| Last Updated: சனி, 11 நவம்பர் 2017 (18:20 IST)
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இலங்கை அணிக்கு ஏழு கேப்டன்களை நியமித்துள்ளனர். ஆனாலும் இலங்கை அணி போட்டிகளில் வென்றபாடில்லை. 

 
 
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் டி-20 அனைத்திலும் தோல்வியடைந்தது இலங்கை கிரிக்கெட் அணி.
 
தற்போது பாகிஸ்தானுடன் விளையாடி வரும் நிலையில், டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றாலும், ஒரு நாள் போட்டியில் வொய்ட் வாஷ் செய்யப்பட்டது.  
 
அடுத்து பாகிஸ்தானுடன் டி-20 போட்டியில் விளையாடவுள்ளது. டி20 போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கு புதிய கேப்டனாக திசாரா பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.  
 
கடந்த மூன்று மாதங்களில் ரங்கனா ஹெராத், தினேஷ் சந்தமால், சமாரா குபுகேதரா, லசித் மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், உபுல் தரங்கரா ஆகியோர் கேப்டன்களாக இருந்துள்ளனர். தற்போது திசாரா பெரேரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இலங்கை அணி பல முக்கிய வீரர்களை இழந்துள்ள நிலையில், அணி மேலும் சரிவை நோக்கி பயணிக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :