1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By bala
Last Updated : செவ்வாய், 17 அக்டோபர் 2017 (15:50 IST)

பாகிஸ்தானுக்கு செல்லும் இலங்கை அணி

நீண்ட காலத்திற்கு பின் இலங்கை அணி மீண்டும் பாகிஸ்தான் நாட்டிற்கு செல்கிறது.

2009-ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது அந்த அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த சம்பவத்திற்கு பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக அந்நாட்டுக்கு எந்த அணிகளும் சென்று விளையாட முன்வருவதில்லை.


 

இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் - இலங்கை இடையேயான தொடர் ஐக்கிய அரபு நாட்டில் நடந்து வருகிறது. மூன்று 20 ஓவர் போட்டியில் கடைசி ஆட்டத்தை (29-ந் தேதி) மட்டும் லாகூரில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.

ஆனால் பாதுகாப்பு காரணங்களால் இலங்கை வீரர்கள் மறுத்தனர். ஆனால் தற்போது இலங்கை அணி லாகூரில் விளையாட ஒப்புக்கொண்டுள்ளது. இதனை அன் நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.