1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : வியாழன், 9 நவம்பர் 2017 (18:23 IST)

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும்போது எங்கே போனீர்கள் ராகுல்? தமிழிசை

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்திற்கு ஆதரவாக ராகுல்காந்தி சற்றுமுன் பதிவு செய்த டுவீட்டில், ' 'மெர்சல்' படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் தமிழின் பெருமையை மதிப்பிழக்க செய்ய வேண்டாம் என்றும், திரைப்படம் என்பது தமிழ் மொழி கலாச்சாரத்தின் ஆழமாக வெளிப்பாடு' என்று கூறியிருந்தார்.



 
 
ராகுல்காந்தியின் இந்த கருத்துக்கு தற்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பதில் அளித்துள்ளார். இப்போது தமிழ் மொழியின் பெருமை, தமிழ் மொழி கலாச்சாரம் குறித்து பேசும் ராகுல்காந்தி இலங்கையில் காங்கிரஸ் கட்சியின் துணையோடு தமிழர்கள் கொல்லப்பட்டபொழுது எங்கே சென்றிருந்தீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
தமிழிசையின் இந்த கருத்துக்கு தமிழ்க காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் விரைவில் பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது