செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (14:22 IST)

பாகிஸ்தான் செல்ல மறுப்பு: இலங்கை அணி போர்க்கொடி!!

பாகிஸ்தான் அணியுடன் டி20 கிரிக்கெட் போட்டி விளையாட இருந்த இலங்கை அணி திடீரென இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 
 
இந்த மாதம் லாகூரில் நடைபெற இருந்த டி20 போட்டியில் பங்கேற்க முடியாது என இலங்கை வீரர்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று கிரிக்கெட் விளையாட முடியாது என 40 வீரர்கள் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பி உள்ளனர். 
 
கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த இலங்கை வீரர்கள் மீதான தாக்குதல் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. பாகிஸ்தானில் கிரிக்கெட் நடத்த ஐசிசி மறுப்பு தெரிவித்து வந்தது. 
 
இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி இலங்கை அணி வீரர்கள் பாகிஸ்தானில் விளையாட மறுப்பு தெரிவித்துள்ளனர். 
 
இதனால், இந்த மாதம் லாகூரில் நடக்க இருந்த பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியை எப்படி நடத்துவது என தெரியாமல் குழம்பி உள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.