1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 5 டிசம்பர் 2017 (15:56 IST)

இலங்கை அணிக்கு விராத் கோஹ்லி கொடுத்த இமாலய இலக்கு

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெல்லி டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் இன்னிங்சில் 536 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது இந்தியா. பதிலுக்கு இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 373 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
 
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இரண்டாவது இன்னிங்ஸில் தவான் 67 ரன்களும், விராத் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா தலா 50 ரன்களும் குவித்தனர்.
 
இந்த நிலையில் இலங்கை அணி வெற்றி பெற 410 ரன்கள் என்ற இமாலய இலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் இந்தியா 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி வெற்றி பெறுமா? அல்லது இலங்கை அணி 410 ரன்கள் எடுத்து வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்