1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 4 டிசம்பர் 2017 (16:42 IST)

எனக்கு டெஸ்ட் போட்டியும் பிடிக்காது, இவரையும் பிடிக்காது: யாரை கூறுகிறார் கோலி?

இந்தியா இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நேற்று நடந்த இரண்டாம் நாள் போட்டிக்கு பின்னர் கோலி ஒரு பேட்டியளித்திருந்தார். 
 
இந்த பேட்டியில், புஜாரா, கோலியை பேட்டி எடுத்தார். இந்த பேட்டியில் சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் கோலி. தனது முதல் கேள்வியாக புஜாரா, கோலியிடம் இரட்டை சதம் குறித்து கேள்வி எழுப்பினார். 
 
எனக்கு செஞ்சுரிகள் அடிக்க பிடிக்கும். அதை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டே வருகிறேன். எப்போதும் செஞ்சுரி எடுத்தவுடன் போதும் என்று விட மாட்டேன். அதைவிட அதிக ரன்கள் எடுக்கவே முயற்சி செய்வேன் என்று கோலி பதிலளித்தார்.
 
இதனை தொடர்ந்து கோலி, எனக்கு புஜாராவை பிடிக்காது. அவர் எல்லா போட்டியிலும் என்னை வென்றுவிடுகிறார். டென்னிஸ், கால் பந்து என எல்லாவற்றிலும் அவர் வெற்றி பெறுகிறார். அவருடன் விளையாடுவது கஷ்டமாக இருக்கிறது என்று கூறினார். 
 
எனக்கு துவக்கத்தில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட பிடிக்காது. இப்போது நான் பொறுமையாக அதிக நேரம் களத்தில் இருக்க காரணம் புஜாரா. அவரிடம் பொறுமையாக இருக்க கற்று கொண்டேன் என்றும் தெரிவித்தார்.