செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 15 செப்டம்பர் 2021 (08:05 IST)

3 டி20 போட்டிகளிலும் தெ.ஆப்பிரிக்கா வெற்றி: சொந்த நாட்டில் படுதோல்வி அடைந்த இலங்கை

3 டி20 போட்டிகளிலும் தெ.ஆப்பிரிக்கா வெற்றி
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி வரும் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஏற்கனவே இரண்டு டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி நேற்று நடந்த 3வது டி20 போட்டியிலும் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 14.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் அடித்து உள்ளன என்பதும் குவின்டன் டி காக் 59 ரன்களும் என்று ஹெண்ட்ரிக் 56 ரன்களும் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குவிண்டன் டிகாக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் 
 
இந்த வெற்றியின் மூலம் 3-0 என்ற புள்ளிகளின் அடிப்படையில் தென் ஆப்பிரிக்க அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சொந்த நாட்டில் இலங்கை அணி படுதோல்வி அடைந்தது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது