புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (08:51 IST)

டி20 உலகக்கோப்பை: மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு!

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்திய அணி அறிவிக்கப்பட்டது என்பதும் அதில் அஸ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இரண்டு தமிழர்கள் இடம் பெற்றிருந்தார்கள் என்பதையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் சற்று முன்னர் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட போகும் மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பொல்லார்டு கேப்டனாகவும் பூரன் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் உள்ள வீரர்களின் விபரங்கள் பின்வருமாறு:
 
பொல்லார்டு, பூரன், அல்லென், சேஸ், பிராவோ, ஹொசெயின், பிளெட்சர், கெய்லே, ஹெட்மயர், லீவீஸ், மெக்காய், காட்ரல், சிம்மன்ஸ், ராம்பால், ரஸல், தாமஸ், வால்ஷ் மற்றும் ஹோல்டர்.
 
அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நவம்பர் 14ஆம் தேதி இறுதிப்போட்டியுடன் முடிவடைகிறது என்பதும், கிட்டத்தட்ட ஒரு மாதம் கிரிக்கெட் திருவிழா நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதுல்.