செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (19:52 IST)

2வது ஓவரிலேயே விக்கெட்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது போட்டியில் இலங்கை!

2வது ஓவரிலேயே விக்கெட்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது போட்டியில் இலங்கை!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது என்பதும் தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன்னர் இலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது 
 
இந்த நிலையில் 2-வது ஓவரிலேயே இலங்கையின் தினேஷ் சண்டிமால் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடதக்கது. ஏற்கனவே இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி தென் ஆப்பிரிக்க அணி வென்ற நிலையில் இந்த போட்டியையும் அதே அணி வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்