புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

இலக்கை நெருங்கியது தென்னாப்பிரிக்கா: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தோல்வியா?

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றியை நெருங்கி விட்டதால் இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தோல்வி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த 11ம் தேதி ஆரம்பித்த கேப் டவுன் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 223 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 198 ரன்கள் அடித்தது
 
இதனையடுத்து முதல் இன்னிங்சில் 210 ரன்கள் எடுத்திருந்த தென்னாபிரிக்க அணிக்கு 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது
 
 இந்த நிலையில் தற்போது 2வது இன்னிங்சை விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்து உள்ளது என்பதும் இன்னும் 111 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
நான்காம் நாளான இன்று 8 விக்கெட்டுகள் கைவசம் வைத்திருக்கும் தென்ஆப்பிரிக்க அணி எளிதாக 111 ரன்களை எடுத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது