செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 13 ஜனவரி 2022 (18:54 IST)

தென்னாப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் இலக்கு: ரிஷப் பண்ட் அபார சதம்!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அபாரமாக விளையாடிய ரிஷப் பண்ட் சதம் அடித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் இந்திய அணி 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியா தனது முதல் இன்னிங்சில் 223 ரன்கள் எடுத்து இருந்தது என்பதும் தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 210 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ரிஷப் பண்ட் அபாரமாக விளையாடி சதம் அடித்துள்ளார் என்பதும் இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் கடைசி வரை அவுட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற 212 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் சற்று நேரத்தில் தென்னாபிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட உள்ளது என்பது குறிபிடத்தக்கது