வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 13 ஜனவரி 2022 (18:11 IST)

7 விக்கெட் விழுந்தபின்னரும் தனியாளாய் போராடும் ரிஷப் பண்ட்!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட் இழந்த பின்னரும் ரிஷப் பண்ட் சூப்பராக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
2-வது இன்னிங்சில் இந்தியா தற்போது 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் அடித்து உள்ளது என்பதும் ரிஷப் பண்ட் 77 ரன்களுடன் விளையாடி வருகிறார் என்பதும் இதில் நான்கு பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியா தனது முதல் இன்னிங்சில் 223 ரன்கள் எடுத்த நிலையில் தென் ஆப்பிரிக்கா 210 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் தற்போது இந்திய அணி 193 ரன்கள் முன்னிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது இன்று 3-வது நாள் ஆட்டம் மட்டுமே நடந்து வரும் நிலையில் இந்த போட்டி நாளைக்குள் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது