உலகக் கோப்பை கால்பந்து : வேல்ஸை வீழ்த்தி இரான் வெற்றி !
ஃபிஃபா -22வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் தற்போது கத்தாரில் கோலாகலமாக நடந்து வருகிறது.
இத்தொடரில், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, பிரான்ஸ் உள்ளிட்ட முன்னணி அணிகள் உள்ளிட்ட 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
இம்முறை எந்த அணி கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு வேல்ஸ் அணியுடன் ஈரான் அணி மோதியது.
இதில், ஈரான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது. எனவே, அந்த நாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.
Edited by Sinoj