வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 21 செப்டம்பர் 2020 (16:30 IST)

அடுத்த போட்டியில் ஆடுவார்… ஆனால் இறுதி முடிவு பிஸியோதெரபிஸ்ட் கையில்- அஸ்வின் குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் !

நேற்றைய போட்டியில் காயமடைந்த அஸ்வின் அடுத்த போட்டியில் விளையாட தயாராவேன் என கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரிடம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் ஐபிஎல் தொடரில் மிகவும் ஆதிக்கம் செலுத்திய சுழல் பந்து வீச்சாளர்களில் ஒருவர். கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவர் இந்த ஆண்டு டெல்லி அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஒரு ஓவர் மட்டுமே பந்துவீசி களத்தில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் அவர் இந்த தொடரில் இருந்து விலக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ள கருத்தின் படி ‘நான் அஸ்வினிடம் பேசினேன். அவர் மனதளவில் உறுதியாக உள்ளார். அடுத்த போட்டிக்கு தயாராகி விடுவேன் எனக் கூறினார். ஆனால் இறுதி முடிவு அணியின் பிஸியோதெரபிஸ்ட் கையில்தான் உள்ளது.’ எனக் கூறியுள்ளார்.