செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 21 செப்டம்பர் 2020 (16:29 IST)

கொரோனா நெகட்டிவ்… ஆனாலும் பெற்ற தாயை வீட்டுக்குள் அனுமதிக்காக மகன் – அதிர்ச்சியளிக்கும் சம்பவம்!

ஐதராபாத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்ட தாயை வீட்டுக்குள் அனுமதிக்க அவரது மகன் மறுத்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் வசித்துவந்தவர் பாலாமணி. இவரது மகன் மின்சாரத்துறையில் பணியாற்றி வருகிறார். ஆனால் தனது தாயாரை தன்னுடன் வைத்துக்கொள்ள விரும்பாத அவர் முதியோர் இல்லத்தில் அவரை சேர்த்துள்ளார். அங்கே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அங்கே முழுவதும் குணமான அவரை மருத்துவமனை நிர்வாகம் அவரது வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளது.

ஆனாலும் அவரது மகன் அவரை வீட்டுக்குள் சேர்க்க மறுத்துள்ளார். கொரோனா காரணமாக முதியோர் இல்லமும் மூடப்பட்டதால் போக்கிடம் இல்லாத அந்த அம்மா, வீட்டுக்கு வெளியே உள்ள காலியிடத்தில் தங்கியுள்ளார். இது சம்மந்தமாக செய்திகள் சமுகவலைதளங்களில் பரவவே, அவரது மகன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்று தலைமறைவாகியுள்ளார்.