ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 21 செப்டம்பர் 2020 (16:29 IST)

நள்ளிரவில் வந்த ஏடிஎம் அலாரம்… சென்று பார்த்த போலிசாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

வேலூர் மாவ்ட்டம் ஜோலார்பேட்டை அருகே ஏடிஎம் இயந்திரத்தை மர்மநபர் ஒருவர் உடைக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோலார்பேட்டை புது ஓட்டல் தெருவில் ஒரு ஏடிஎம் எந்திரத்தில் இருந்து நேற்று முன் தினம் 12.25 மணிக்கு அலார சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து பொது மக்கள் ஜோலார்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக அங்கு போலிஸார் விரைந்துள்ளனர். அப்போது அங்கிருந்த ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருந்துள்ளது.

‘இதையடுத்து போலிஸார் வங்கி ஊழியர்கள் வரவழைத்து அலாரத்தை நிறுத்தினர். அங்கிருந்த கேமராவில் ஆய்வு செய்த போது, முகமூடி அணிந்த நபர் ஒருவர் இரவு 12 மணிக்கு ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்து எந்திரத்தை இரும்புக் கம்பியால் உடைக்க முயற்சி செய்துள்ளார். அலார சத்தம் கேட்டதும் அவர் அங்கிருந்து ஓடியுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முகமூடி அணிந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.