தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறாரா அஸ்வின்? டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவு!
- 90 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!
- கொரோனா பரிசோதனை செய்துகொண்ட ரஜினி பட நடிகை!
- ஒப்பந்தம் செய்யப்பட்ட 2 போட்டியாளர்களுக்கு கொரோனா - தள்ளிப்போகுமா பிக்பாஸ்-4 ?
- குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை களவாடுகிறதா கூகுள், ஃபேஸ்புக்?
பிறந்த சில மணிநேரக் குழந்தையை குளத்தில் வீசிய கொடூரர்கள்… கண்ணீர் வரவழைக்கும் சம்பவம்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மடாப்பள்ளி எனும் கோயில் குளத்தில் பிறந்து சில மணிநேரங்களே ஆன குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் அருகே மாடாகுடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் குளத்தில் ஒரு குழந்தையின் சடலம் மிதந்துள்ளது. இதைப்பார்த்த மக்கள் பட்டீஸ்வரம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் சிசுவின் உடலைக் கைப்பற்றினர். அதில் குழந்தையின் தொப்புள் கொடி கூட இன்னும் விழவில்லை என்பதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.
மேலும் குழந்தை பிறந்த சில மணிநேரங்களுக்குள்ளாகவே குளத்தில் வீசப்பட்டிருக்க வேண்டும் என தெரிகிறது. இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்துள்ள போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
