1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 12 பிப்ரவரி 2022 (15:06 IST)

மயங்கி விழுந்த ஐபில் ஏல அறிவிப்பாளர்! பாதியில் நிறுத்தம்!

இன்று ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு தொடருக்கான ஏலம் பெங்களூருவில் தொடங்கி நடந்தது.

இந்தியன் ப்ரீமியர் லீக் டி 20 போட்டிகள் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கவனிக்கப்படும் போட்டி தொடராக உள்ளது. கடந்த ஆண்டு வரை ஐபிஎல்லில் 8 அணிகள் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன. அதற்கான ஏலம் இன்றும் நாளையும் பெங்களூருவில் நடக்கின்றன.

இந்நிலையில் ஏலத்தை நடத்திக் கொண்டிருந்த ஹக் மெடேஸ் திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார். இது அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனால் ஏலம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.