1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 25 நவம்பர் 2021 (15:37 IST)

ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம்: 200 ரன்களை கடந்தது இந்தியா!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கான்பூரில் இன்று நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சுப்மன் கில் ஏற்கனவே அரைசதம் அடித்து இருந்த நிலையில் சற்று முன்னரே ஸ்ரேயாஸ் அய்யரும் அரை சதம் அடித்துள்ளார். அவர் 99 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடித்து 54 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அவருக்கு இணையாக விளையாடி வரும் ஜடேஜாவும் 26 ரன்கள் எடுத்துள்ளார் இந்த நிலையில் இந்திய அணி சற்று முன் வரை 72 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ந்திய அணி முதல் இன்னிங்சில் 300 ரன்களை கடந்தால் நியூசிலாந்து அணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது